பலாத்கார தகனத்துக்கு எதிராக: மன்னாரில் கவனஈர்ப்பு போராட்டம்

🕔 December 31, 2020

– எ.எம். றிசாத் –

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரை பலாத்காரமாக தகனம் செய்வதற்கு எதிராகவும், அவ்வாறான உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறும் கோரி, மன்னாரில் இன்று வியாழக்கிழமை கவனஈர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்த இந்த கவனஈர்ப்பு போராட்டம், மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தவிசாளர்களான எம். முஜாஹிர், செல்லத்தம்பு பிரதேசபை உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என, பலரும் கலந்து கொண்டனர்.

சுகாதார வழிகாட்டலுக்கு இணங்க, சமூக இடைவெளி பேணப்பட்டு இந்த அமைதிப் போராட்டம் இடம்பெற்றது.

Comments