அக்கரபத்தனை தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி: இரண்டு உள்ளுராட்சி சபைகள் மூடப்படப்பட்டன

🕔 December 21, 2020

– க. கிஷாந்தன்

க்கபரத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையை அடுத்து, அவருக்கு இன்று திங்கட்கிழமை மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளரிடம் கடந்த 16 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெற்றப்பட்டன. இதனடிப்படையில் அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையிலேயே இன்றைய தினம் – அவர் மீண்டும் பி.சி.ஆர்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் அக்கரபத்தன பிரதேச சபை மற்றும் தலாவக்கலை – லிந்துலை நகரசபை ஆகியன இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

வைரஸ் தொற்று என உறுதிப்படுத்தப்பட்ட தவிசாளர் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். அதில் ஆளுங்கட்சி பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்த நிலையில், முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே அவர் பல இடங்களுக்கு சென்றுள்ளார் எனவும் தெரியவருகிறது.

Comments