கொரோனாவினால் மரணிக்கும் வெளிநாட்டவர் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதை ஆதரிக்க முடியாது: முன்னாள் ஜனாதிபதி கயூம்

🕔 December 15, 2020

– அஹமட் –

கொவிட் – 19 காரணமாக உயிரிழக்கு வெளிநாட்டவர்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதை தன்னால் ஆதரிக்க முடியாது என்று அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மமூன் அப்துல் கயூம் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் உயிரிழக்கும் இலங்கையர்களின் உடல்களை தமது நாட்டில் அடக்கம் செய்வதற்கு – மாலைதீவு அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ள நிலையிலேயே, முன்னாள் ஜனாதிபதி கயூம் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

இருந்தபோதும் ‘மதம் மற்றும் நம்பிக்கையினை பொருட்படுத்தாமல் அனைத்து நாட்டவர்களையும் இங்கு வந்து (மாலைதீவில்) அமைதியாகவும் சந்தோசமாகவும் இருப்பதற்கு நாம் அழைக்கிறோம்’ எனவும் அப்துல் கயூம் அந்த ‘ட்விட்டர்’ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

‘இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இலங்கையில் கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயுமாறு> அந்த நாட்டு ஜனாதிபதி இப்றாகிம் முகம்மட் சோலிஹ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்’ என்று, மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷஹிட் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இலங்கையில் கொவிட் – 19 காரணமாக உயிரிழப்போரின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கு மாலைதீவு அரசு விரும்பம் தெரிவித்திருந்தது.

உத்தியோகபூர்வ அறிக்கையொன்றின் வழியாக இலங்கை வெளியுறவு அமைச்சுக்கு தனது விருப்பத்தினை மாலைதீவு அரசு தெரிவித்திருந்தது.

இவ்வாறான பின்னணியில்தான், கொவிட்ட – 19இனால் உயிரிழந்த வெளிநாட்டவரின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கு தான் ஆதரவில்லை என்று அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: கொவிட் காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்குவதற்கு இடம் வழங்க மாலைதீவு தயார்: இலங்கைக்கு அறிவித்தது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்