பொது பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர நியமனம்: சமலுக்கு புதிய பொறுப்புகள்

🕔 November 26, 2020

ராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த ரியர் அத்மிரால் சரத் வீரசேகர, பொது பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

சரத் வீரசேகர இதற்கு முன்னர் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சராக செயற்பட்டு வந்தார்.

கொழும்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பாகப் போட்டியிட்ட சரத் வீரசேகர, அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமைச்சர் சமல் ராஜபக்ஷ பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ ராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்