மாதவிடாய் வறுமை

🕔 November 25, 2020

ரு நாடாக, பெண் மரண வீதம் குறைவான தேசமாகவே நாம் அடையாளப் படுத்தப்பட்டுள்ளோம்.

பெண் உறுப்பு சார்ந்த புற்றுநோய்களுக்கு, மாதவிடாய் குருதி சார்ந்து ஏற்படுகின்ற சில பிரச்சினைகளும், சுத்தம் போதாமையும் காரணமாக உள்ளன.

இந்த விடயத்தில் இருந்து ஆரோக்கியமாக இருக்க – ஆரோக்கிய துவாய் (Sanitary Napkin) மாற்றுதல் மற்றும் தூமச்சீலை பயன்படுத்துவதை தவிர்த்தல் சிறந்தது.

அயல் நாடான இந்தியாவில்ஆரோக்கிய துவாய்காக (Sanitary Napkin) போராட்டம் நடாத்தியவர் வீரனாக மாறினார். இலங்கையில் இந்த விடயம் பற்றி பேசுபவர்கள் கேலிக்குரியவர்களாக மாற்றி விடுகின்றனர்.

இலங்கையின் நிலை இவ்வாறு இருக்க, இந்தியாவில் ஆரோக்கிய துவாய்க்கு (Sanitary Napkin) விதிக்கப்பட்டிருந்த 12% வரி – மக்கள் எதிர்ப்பால் நீக்கப்பட்டது.

மாதவிடாய் வறுமை (Period poverty) என்ற கருத்தியலை முதலில் உலகில் பேசிய நாடு ஸ்கொட்லாந்து ஆகும். பருவ வயதை அடைந்த பெண், ஆரோக்கிய துவாய் (Sanitary Napkin) பயன்படுத்த ஆரம்பிக்கிறாள்.

இலங்கையில் 52% பெண்களில் 30% ஆனவர்களே இந்தத் துவாயை பயன்படுத்துகின்றனர்.

சாதாரணமாக ஒரு பெண் தனது வாழ் நாளில் 30 வருட காலப்பகுதியில் மாதவிடாயை அனுபவிக்கிறாள். ஒரு மாதவிடாய் காலப்பகுதியில் 20 நப்கின்களை பயன்படுத்துகின்றாள் எனின் வருடத்திற்கு 240 நப்கின்கள். முப்பது வருடத்திற்கு 7200 நப்கின்களை பயன்படுத்துகின்றாள்.

எனவே நாட்டில் உள்ள மொத்த பெண்கள் பயன்படுத்தும் நப்கின்களின் பெறுமானம் டொன் கணக்கில் நீண்டு செல்கின்றது.

இந்த நிலையில் அநுராதபுரம் மாவட்டம் உட்பட வறுமையில் உள்ள மாவட்டங்களில் அதிகமான பாடசாலை மாணவிகள் மாதவிடாய் காலத்தில் பாடசாலைக்கு செல்லாமல் இருக்கின்றனர்.

அதே போல கிராமப்புறங்களில் அதிகமான பெண்கள் இன்னமும் சுகாதார துவாய்ளுக்கு பதிலாக தூமச் சீலைகளை பயன்படுத்துகின்றனர்.

தன் மனைவிக்கு ஆரோக்கிய துவாய்களை கடைக்கு சென்று வாங்கிக் கொடுக்கத் தயங்கும் ஆண்கள் வாழும் நாட்டில், மாதத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது பெண் ஒருத்தி படுகின்ற மானசீக மற்றும் உடல் ரீதியான கஷ்டத்தை இங்கு வேடிக்கையாகவே பார்க்கின்றனர்.

இந்த நிலையில் தான் நப்கின்களுக்கான வரி விதிப்பு இடம் பெற்றுள்ளன.

(சிங்களத்தில் ஆக்கம்: விமுக்தி துஷாந்த. தமிழில் மொழிபெயர்ப்பு: பிஸ்றின் முகம்மத்)

தொடர்பான செய்தி: மாதவிடாயிலும் இந்த அரசாங்கம் வரி அறவிடுகிறது: பெண் நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம்

Comments