ஒரே நாளில் அதிக கொரோனா மரணம் பதிவு; நள்ளிரவில் வெளியிடப்பட்ட அறிக்கை

🕔 November 22, 2020

நாட்டில் ஒரேநாளில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் மரணமடைந்ததமை உறுதி செய்யப்பட்ட நாளாக நேற்று சனிக்கிழமை அமைந்தது.

09 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனாவினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது. 

கொழும்பு 02 ஐ சேர்ந்த 57 வயது ஆண், வெல்லப்பிட்டியை சேர்ந்த 65 வயது ஆண், தெமட்டகொடையை சேர்ந்த 89 வயது ஆண், கொழும்பு 10ஐ சேர்ந்த 72 வயது ஆண், கொழும்பு 10ஐ சேர்ந்த 48 வயது பெண், கொழும்பு 13ஐ சேர்ந்த 69 வயது பெண், வெள்ளவத்தையை சேர்ந்த 76 வயது ஆண், வெல்லப்பிட்டியை சேர்ந்த 75 வயது பெண் மற்றொரு 76 வயது பெண் என, 09 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

இன்றைய தினம் சம்பவித்த மரணங்களில் நான்கு மரணங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றன, அதேவேளை இரண்டு மரணங்கள் அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையிலும் 03 மரணங்கள் அவரவர் வீடுகளிலும் இடம்பெற்றன.

இந்த மரணங்கள் தொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களம் நள்ளிரவு நெருங்கிய வேளையில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments