இந்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

🕔 November 12, 2020

2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் அரசாங்கத்தின் வரவு – செலவுகள் குறித்து ஒதுக்கீட்டு சட்ட மூலம் தொடர்பாக, நிதியமைச்சர் என்ற வகையில் தமது நிலைப்பாட்டு அறிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று முன்வைத்தார்.

அரசாங்கத்தின் ஒவ்வொரு துறைக்குமான ஒதுக்கங்கள் பற்றிய அறிக்கையை பிரதமர் நாடாளுமன்றில் வாசித்தார்.

இதன்படி அரசாங்கத்தின் ஒதுக்கீட்டு சட்ட மூலம் குறித்த விவாதம் இடம்பெற்ற நிலையில், இன்று மாலை இதுமீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த நிலையிலேயே 2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொவிட் 19 பரவல் அச்சுறுத்தல் கருதி இன்றைய விவாதத்தின் போது செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்