கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய, அமைச்சரவை அனுமதி

🕔 November 9, 2020

கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அங்கிகாரம் வழங்கியுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தன்னிடம் தெரிவித்தார் என, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கிகாரம் ஏகமனதாக வழங்கப்பட்டதாக நீதியமைச்சர் தன்னிடம் கூறியதாகவும் றிஸ்வி முப்தி குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, கொரோவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை மன்னார் போன்ற பகுதிகளில் அடக்கம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வரை நாட்டில் கொரோனாவினால் 36 பேர் மரணித்துள்ளனர். அவர்களில் 16 பேர் முஸ்லிம்களாவர்.

மரணித்த முஸ்லிம்கள் அனைவரின் உடல்களும் இதுவரை தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

றிஸ்வி முப்தியின் குரல் பதிவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்