ஐ.தே.க. தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக நவீன் அறிவிப்பு

🕔 October 22, 2020

க்கிய தேசிய தேசிய கட்சியின் தலைவர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க போட்டியிடவுள்ளதாக நேற்று அறிவித்துள்ளார்.

கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக முடிவு செய்துள்ளதால், தான் முன்வந்து தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக நவீன் திஸாநாயக்க கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர்; “ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக யார் இருக்க வேண்டும் என்பதை கட்சியின் செயற்குழுவால் மட்டுமே தீர்மானிக்க முடியாது” என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் கருத்தையும் கேட்டு, புதிய தலைவரை நியமிக்க முற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்று தோல்வியை தழுவிக்கொண்டதை அடுத்து – கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் அறிவித்திருந்தார்.

கடந்த மாதம் ருவன் விஜேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய துணைத் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். துணைத் தலைவர் பதவிக்கு விஜேவர்தன மற்றும் ரவி கருணநாயக்க ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் ஒரு ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ருவன் விஜேவர்தன புதிய துணைத் தலைவராக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தகது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்