மாகந்துர மதுஷ் வழங்கிய தகவலில், 10 கிலோகிராம் ஹெரோயின் சிக்கியது

🕔 October 17, 2020

கொட்டிகாவத்தை பிரதேசத்தில் வைத்து 10 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபரொருவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி 100 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரபல போதைப் பொருள் வியாபாரி மாகந்துர மதுஷ் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

குற்றப் புலனாய்வு பிரிவினரின் காவலில் வைக்கப்பட்டிருந்த மாகந்துர மதுஷ், நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்