மைத்திரி, ரணில் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள, பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை

🕔 October 12, 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய சுற்றறிக்கையொன்றின் பிரகாரம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட 100 விசேட அதிரடிப்படையினரில் 94 பேர் திரும்பப் பெறப் பட் டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட 100 பொலிஸாரில் 54 பேர் மட்டுமே தொடர்ந்து பாதுகாப்பளிப்பர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நியமிக்கப்பட்ட 200 பொலிஸாரில் 60 பேரே தொடர்ந்து தக்கவைக்கப்படுவர்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர் தங்கியிருந்த வீட்டை திரும்ப ஒப்படைக்க இரு மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்