20ஆவது திருத்தத்துக்கு எதிராக மு.காங்கிரஸ் சார்பில் 02 மனுக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல்

🕔 September 28, 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா –

ரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இன்று திங்கட்கிழமை உச்ச நீதிமன்றில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஒரு மனுவை – கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம் ஆகியோர் சார்பில் கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் தாக்கல் செய்துள்ளார்.

மற்றொரு மனுவை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் நேரடியாக தாக்கல் செய்துள்ளார்.

இந்த இரண்டு மனுக்களுடன் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக மொத்தம் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

இம்மனுக்கள் நாளை செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றத்த்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்