அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சுஜீவ சேனசிங்க அறிவிப்பு

🕔 September 28, 2020

ரசியலில் இருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுஜீவ சேனசிங்க அறிவித்துள்ளார்.

அத்தோடு கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்டதில் போட்டியிட்ட சுஜீவ சேனசிங்க தோல்வியடைந்தார்.

இதனையடுத்தே, அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

Comments