தலைப்புச் செய்திகள்

வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்: ஆசாத் சாலி தெரிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண சபையின் ஆளுநருமான ஆஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலின் போது, தேசியப்பட்டியல் ஊடாக தனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாக சஜித் பிரேமதாஸ உறுதியளித்திருந்த போதும், பின்னர் அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை என ஆசாத் சாலி கூறியுள்ளார்.

இதனையடுத்து தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியமைக்காக, சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அதற்குரிய கோரிக்கைக் கடிதம் (letter of demand) அனுப்பப்படும் எனவும் ஆசாத் சாலி மேலும் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் தலா ஒவ்வொரு நடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாக சஜித் பிரேமதாஸ வாக்குறுதியளித்திருந்த போதிலும், அதனையும் அவர் நிறைவேற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.