பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்

🕔 September 25, 2020

ந்திய திரைப்படப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், 74ஆவ வயதில் உடல் நலக்குறைவால் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காலமானார்.

இது தொடர்பான தகவலை அவருடைய மகன் எஸ்.பி. சரண் தெரிவித்துள்ளார்.

“எஸ்.பி. பாலசும்பரமணியம் – அவரின் பாடல் இருக்கும்வரை இருப்பார். நீங்கள் எல்லோரும் இருக்கும்வரை அவர் இருப்பார். எனது தந்தை உயிரிழப்பு தொடர்பான விரிவான தகவல்கள் இன்னும் சிறிது நேரத்தில் முழுமையாக வெளிவரும் என்று” என, அவரின் மகன் சரண் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஓகஸ்ட் 05ஆம் திகதி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி.பி, தொடக்கத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். பிறகு வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

1966ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படம் ஒன்றுக்கு பாடத் துவங்கியதில் இருந்து அவரின் இசைப்பயணம் ஆரம்பமானது.

பல்வேறு மொழிகளில் பாடியுள்ள இவர் – உலகளவில் அதிக பாடல்களைப் பாடியவர் எனும் கின்னஸ் சாதனையாளயாகவும் இடம்பிடித்துள்ளார்.

பாடுவதோடு மட்டுமன்றி, இசையமைப்பு மற்றும் நடிப்பிலும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் முத்திரை பதித்துள்ளார்.

இந்திய அரசினால் வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்