20ஆவது திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றில், சஜித் அணி மனுத் தாக்கல்

🕔 September 23, 2020

ரசியலமைப்புக்கான 20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை சவாலுக்கு உட்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்துள்ளது.

இதேவேளை, 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் ஊடாக அடிப்படை உரிமை மீறல் இடம்பெறுவதால் குறித்த சட்டமூலம் பொதுஜன வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

சட்டத்தரணி இந்திக கால்லகே இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இதில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி தர்ஷன வேரதுவகேவின் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் ஊடாக உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மற்றும் பல ஏற்பாடுகள் குறைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் எதிர்க்கட்சியின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் நேற்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பா செய்தி: அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் சபையில் சமர்ப்பணம்: ஐக்கிய மக்கள் சக்தியினர் கடும் எதிர்ப்பு

Comments