தீ விபத்தில் மூன்று கடைகள் முற்றாக எரிந்து நாசம்

🕔 September 19, 2020

– க. கிஷாந்தன் –

ராகலை நகரின் பிரதான வீதியின் மருங்கில் அமைந்துள்ள கடைத்தொகுதிகளில் இன்று சனிக்கிழமை அதிகாலை மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூன்று கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

ராகலை ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியின் மருங்கில் அமைந்துள்ள சில்லறை கடை, கோழி கடை மற்றும் தொடர்பாடல் நிலையம்  ஆகியவையே இவ்வாறு எரிந்துள்ளன.

பிரதேச மக்கள், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், ராகலை பொலிஸார் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. ஆயினும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்