ஒன்பது மாகாணங்களுக்குப் பதிலாக, மூன்று மாகாணங்கள்: சரத் வீரசேகர தெரிவிப்பு

🕔 September 14, 2020

நாட்டில் தற்போதுள்ள ஒன்பது மாகாணங்களுக்கு பதிலாக பண்டைய அரச காலத்தில் இருந்தது போல் ருகுணு, பிஹிட்டி மற்றும் மாயா ஆகிய மூன்று மாகாணங்களை மாத்திரம் உருவாக்கி முன்னெடுத்துச் செல்லலாம் என நிபுணர்கள் குழு வழங்கிய யோசனையை அரசாங்கத்திடமும் வழங்க உள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மாகாண சபை மற்றும் பிரதேச சபைகளின் பிரதிநிதிகளை கடந்த 11 ஆம் திகதி கொழும்புக்கு அழைத்து நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போது மாகாண சபைகள் இருப்பதால், தேர்தலை நடத்த வேண்டுமாயின் முடிந்தளவு விரைவில் தேர்தல் நடத்தப்படும் எனவும், இதன் மூலம் மாகாண சபைகள் தொடர்ந்தும் இருக்கும் என்பது அர்த்தமாகாது எனவும் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர – மாகாண சபை முறைமையினை மாற்ற முயற்சிப்பதாகவும் அவர் நினைத்தாற்போல் அதனை மாற்ற முடியாது எனவும் கூறி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள எதிர்ப்புக்கு பதிலளிக்கும் வகையிலேயே ராஜாங்க அமைச்சர் மேற்கண்ட விடயங்களை கூறியுள்ளார்.

அதேவேளை, மாகாண சபைகள் தொடர்பாக சரத் வீரசேகர கூறியிருந்தமை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ; அது சரத் வீரசேகரவின் நிலைப்பாடு என்றும், தனக்கு ஒரு நிலைப்பாடு உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Comments