அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டம் இன்று ஆரம்பம்

🕔 September 14, 2020

ரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான திசைமுகப்படுதல் பயிற்சித் திட்டம், நாடு முழுவதுமுள்ள பாதுகாப்புப் படை தலைமையகங்கள், படையணி தலைமையகங்கள் மற்றும் ராணுவ பயிற்சிப் பாடசாலைகள் என 51 ராணுவ நிலையங்களில் இன்று திங்கள்கிழமை கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படுகின்றது.

ஐந்து கட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டமானது ஒரு மாத கால வதிவிட பயிற்சி திட்டமாகும்.

ஒவ்வொரு கட்டத்திற்கும் 10,000 பட்டதாரிகள் வீதம் 05 மாதங்களுக்குள் 50,000 பட்டதாரிகளுக்கும் பயிற்சியளிக்கப்படவுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் நேரடி கண்காணிப்பில் 07 பாதுகாப்பு படை தலைமையகங்களின் ஒருங்கிணைப்பில் ராணுவ பயிற்சி பணிப்பகத்தினால் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த 05 மாத பட்டதாரி பயிற்சி திட்டத்தின் மூலோபாய கருத்துருவாக்கத்தினை ஜனாதிபதி செயலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பவற்றின் வழிகாட்டல்களில் ராணுவத் தலைமையக பயிற்சி பணிப்பகம் முன்னெடுக்கின்றது.

Comments