மாலி ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது: பதவியை ராஜிநாமா செய்வதாக அதிபர் இப்றாகிம் அறிவிப்பு

🕔 August 19, 2020
இப்றாகிம் – மாலி அதிபர்

மாலி நாட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ராணுவ காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் நேற்று திடீரென ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா பிரதமர் மெய்கா பவ்பு சிசே ஆகியோரை கைது செய்தனர்.

நீண்டநேரம் பேச்சுக்குப்பின் அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா பதவியை ராஜினாமா செய்வதாகவும், நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகவும் தொலைக்காட்சியில் மக்களுக்கு அறிவித்தார்.

மாலி நாட்டின் அதிபராக இருக்கும் இப்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா இரண்டாவது முறை அதிபராக தேர்தலில் தேர்வு செய்யப்பட்டார்.

அவரின் பதவிக்காலம் முடிய இன்னும் 03 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அவரை பதவியிலிருந்து விலகக்க கோரி பல மாதங்களாக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் விளைவாக திடீரென ராணுவப்புரட்சி ஏற்பட்டு, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்