26 அமைச்சர்கள், 39 ராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமனம்

🕔 August 12, 2020

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டனர்.

இன்று புதன்கிழமை முற்பகல் கண்டி மகுல் மடுவவில் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

26 அமைச்சர்களும், 39 ராஜாங்க அமைச்சர்களும் இதன்போது நியமிக்கப்பட்டனர். அதன் விவரம் வருமாறு;

அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்கள்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமனம்

பாதுகாப்பு அமைச்சர் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ

நிதி, புத்தசாசனம் – மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்  –  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ

தொழில் அமைச்சர் – நிமால் சிறிபாலடி சில்வா

கல்வியமைச்சர்  – ஜி.எல்.பீரிஸ் 

சுகாதார அமைச்சர் – பவித்திராதேவி வன்னியாராச்சி

வெளிவிவகார  அமைச்சர்  – தினேஷ் குணவர்தன

கடற்றொழில்  அமைச்சர் – டக்லஸ் தேவானந்தா

போக்குவரத்து அமைச்சர் – காமினி லொக்குகே

வர்த்தக அமைச்சர் – பந்துல குணவர்தன

வனஜீவராசிகள் – சி.பி.ரட்நாயக்க

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் – ஜனக்க பண்டார தென்னகோன்

வெகுஜன ஊடக அமைச்சர்  – கெஹலிய ரம்புக்வெல்ல

நீர்பாசனத்துறை அமைச்சர் – சமல் ராஜபக்‌ஷ

மின்சக்தி அமைச்சர்  – டலஸ் அழகப்பெரும 

நெடுஞ்சாலைகள் அமைச்சர் – ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

கைத்தொழில் அமைச்சர் – விமல் வீரசன்ச

சுற்றாடல் துறை அமைச்சர்  – மஹிந்த அமரவீர

காணி அமைச்சர் – எஸ்.எம்.சந்திரசேன

கமத்தொழில் அமைச்சர் – மஹிந்தானந்த அளுத்கமகே

நீர்வழங்கல் துறை அமைச்சர் – வாசுதேவ நாணயக்கார

வலுசக்தி அமைச்சர் – உதய பிரபாத் கம்பன்பில

பெருந்தோட்டத்துறை அமைச்சர் – ரமேஸ் பத்திரண

சுற்றுலாத்துறை அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க

துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர்  – ரோஹித அபேகுணவர்தன

இளைஞர்  மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் – நாமல் ராஜபக்‌ஷ

நீதியமைச்சர் – அலி சப்ரி

ராஜாங்க அமைச்சர்கள்

உள்நாட்டு உள்ளக விவகார அனர்த்த முகாமைத்துவ ராஜாங்க அமைச்சர் – சமல் ராஜபக்‌ஷ

வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தை பல்வகைமை ராஜாங்க அமைச்சர் – பிரியங்கர ஜயரத்ன

சூரிய சக்தி , காற்று, நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட ராஜாங்க அமைச்சர் – துமிந்த திசாநாயக்க

பத்திக், கைத்தறி உற்பத்தி, உள்நாட்டு ஆடை உற்பத்தி ராஜாங்க அமைச்சர் – தயாசிறி ஜயசேகர

கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் – லசந்த அழகியவன்ன

சிறைச்சாலைகள்புணரமைப்பு, சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு ராஜாங்க அமைச்சர் – சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே

தெங்கு, கித்துள், பனை உற்பத்தி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் – அருந்திக்க பெர்ணான்டோ

கிராமிய வீதிகள், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் – நிமல் லங்சா

காணி முகாமைத்துவ அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் – ரொசான் ரணசிங்க

தேயிலை ஏற்றுமதி மேம்பாடு ராஜாங்க அமைச்சர் – கனக ஹேரத்

தேசிய மரபுரிமைகள், கிராமிய கலைகள் மேம்பாடு  ராஜாங்க அமைச்சர் – விதுல விக்கிரமநாயக்க

சிறு பயிர்செய்கை அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் – ஜானக வக்கும்புர

பௌத்த பல்கலைக்கழகங்கள், பிரிவெனாக்கல் ராஜாங்க அமைச்சர் – விஜித்த பேருகொட

சமுர்த்தி, வியாபார அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் – ஷெகான் சேமசிங்க

உர உற்பத்தி, இரசாயன வளங்கள் ராஜாங்க அமைச்சர் – மொஹான் டி சில்வா

இரத்தினக்கல், கனிய வளங்கள் கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் – ரொஹான் ரத்வத்த

வாகன ஒழுங்குறுத்துகை, மோட்டார் வாகன கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் – திலும் அமுனுகம 

வனஜீவராசிகள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்- விமரவீர திசாநாயக்க 

பிராந்திய உறவு அபிவிருத்தி நடவடிக்கை ராஜாங்க அமைச்சர் – தாரக பாலசூரிய

கிராமிய வீடமைப்பு ராஜாங்க அமைச்சர் – இந்திக்க அநுருத்த

மீன் ஏற்றுமதி ராஜாங்க அமைச்சர் – காஞ்சன விஜயசேகர

கிராமிய மற்றும் பிரதேச நீர் கருத்திட்ட அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் – சனத் நிசாந்த 

மகாவலி வலய கால்வாய் அபிவிருத்தி, பொது உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் – சிறிபால கம்லத்

மகாணசபைகள், உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சர் – சரத் வீரசேகர

கிராமிய வயல்நிலங்கள், குளங்கள், நீர்பாசன அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் – அநுராத ஜயரத்ன 

தபால் சேவைகள், வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் – சதாசிவம் வியாழேந்திரன்

 கிராமிய, பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு ராஜாங்க அமைச்சர் – தேனுக விதானகமகே

ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் – சிசிர ஜயக்கொடி

மகளிர், சிறுவர் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் – பியால் நிஷாந்த டி சில்வா

கிராமிய கைத்தொழில் மேம்பாடு இராஜாங்க அமைச்சர் – பிரசன்ன ரணவீர

விமான சேவைகள், ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் – டி.பி.ஜானக்க

கால்நடை வளங்கள், பால் – முட்டை சார்ந்த தொழில் ராஜாங்க அமைச்சர் – டி.பி.ஹேரத்

நெல், தானிய வகைகள், விதை உற்பத்தி, உயர் தொழில்நுட்பம் ராஜாங்க அமைச்சர் – சஷிந்திர ராஜபக்‌ஷ

நகர அபிவிருத்தி , கரையோர பாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை ராஜாங்க அமைச்சர் – நாலக்க கொடஹேவா 

தோட்ட வீடமைப்பு சமுதாய உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சர் – ஜீவன் தொண்டமான் 

நிதி மூலதனசந்தை, அரச தொழில் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் – அஜித் நிவாட் கப்ரால் 

 திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி ராஜாங்க அமைச்சர் – சீதா அரம்பேபொல

ஔடத உற்பத்தி ராஜாங்க அமைச்சர் – சன்ன ஜயசுமன

Comments

புதிது பேஸ்புக் பக்கம்