வாக்கெண்ணும் நிலையங்கள், இம்முறை இரு மடங்காக அதிகரிப்பு

🕔 July 26, 2020

டைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் வாக்கெண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை 1420 ஆக இருந்தது. ஆனால் இம்முறை சுகாதார வழிகாட்டுதலுக்கு இணங்கவும், முடிவுகளை விரைவாக அறிவிப்பதற்காகவும் வாக்கெண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை 2820 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேற்படி வாக்கெண்ணும் நிலையங்கள் அனைத்தும், 71 வளாகங்களில் அமையப் பெற்றுள்ளதாகவும் ரத்நாயக்க விளக்கமளித்தார்.

“இதன் அடிப்படையில் தபால்மூல வாக்குகளை எண்ணுவதற்காக 453 நிலையங்களும், சாதாரண வாக்குகளை எண்ணுவதற்காக 2367 நிலையங்களும் அமைக்கப்படும்.

இந்தத் தேர்தலில் 16,263,885 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 12744 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்