தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு, தொலைபேசி சின்னத்தின் வேட்பாளர்கள், அதிக பணம் செலவிட்டுள்ளனர்: அறிக்கையில் தெரிவிப்பு

🕔 July 26, 2020

திர்வரும் நாடாSமன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் செலவு செய்த பணம் எவ்வளவு என்பது தொடர்பில் புதுப்பித்த அறிக்கையினை, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் வெளியிட்டுள்ளது.

ஜூலை 02 முதல் 15ஆம் திகதி வரையிலான காலத்தை உள்ளடக்கிய செலவுகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையின்படி, சமகி ஜன பலவேக (தொலைபேசி சின்னம்) 185 மில்லியன் ரூபா செலவிட்டு – பிரச்சார செலவில் முன்னிலை வகிக்கிறதுது அடுத்து பொதுஜன பெரமுன (தமாரை மொட்டு சின்னம்) 151 மில்லியன் ரூபா, ஐக்கிய தேசிய கட்சி (யானை சின்னம்) 123 மில்லியன் ரூபா, தேசிய மக்கள் சக்தி (திசை காட்டி சின்னம்) 36 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளன.

மேற்படி அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள 07 கட்சிகளின் வேட்பாளர்கள், குறித்த காலப்பகுதியில் மொத்தமாக 514 மில்லியன் ரூபாவை தமது பிரசார நடவடிக்கைகளுக்காக செலவிட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்