‘கலம்’ சர்வதேச ஆய்வு சஞ்சிகை: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம்

🕔 July 21, 2020

‘கலம்’ சர்வதேச ஆய்வுச் சஞ்சிகையின் நிகழ்நிலை அங்குரார்ப்பண விழா தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அந்தப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.. நாஜிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

‘கலம்’ சர்வதேச ஆய்வுச் சஞ்சிகையின் வரலாற்றுப்பின்னணியுடன் வரவேற்புரையை பிரதம பதிப்பாசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கரின் பீடாதிபதி உரை இடம்பெற்றது.

‘கலம்’ சர்வதேச ஆய்வுச் சஞ்சிகையை, உபவேந்தர் நாஜிம் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

இந்நிகழ்வில் இணைப்பதிப்பாசிரியர் எம்.ஏ.எம். பௌசர், பேராசிரியர்கள், நூலகர் எம்.எம். றிபாயுடீன், சிரேஷ்ட உதவி நூலகர்கள், துறைத்தலைவர்கள், கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்