புத்தளம் மாவட்ட தொலைபேசி சின்ன வேட்பாளர், வாகன விபத்தில் பலி

🕔 July 5, 2020

க்கிய மக்கள் சக்தியின் (தொலைபேசி சின்னம்) புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக வடிகமன்காவ (வயது 68) இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

புத்தளம் – குருணாகல் வீதியில் மரகஸ்கொல்ல எனும் இடத்தில் இடம்பெற்ற விபத்திலேயே இவர் மரணமடைந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த கார், எதிரே வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இவர் வடமேல் மாகாண சுகாதார அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளராக பதவி வகித்த இவர், பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டார்.

இம்முறை பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக புத்தளம் மாவட்டத்தில் இவர் களமிறங்கியிருந்த போது, இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்