தரம் 01, 02 மாணவர்களுக்கு பாடசாலை திறக்கப்படும் தினம் குறித்து அறிவிப்பு

🕔 July 1, 2020

கொரோனா அச்சத்தின் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளின் தரம் 01 மற்றும் தரம் 02 வகுப்புகள் அனைத்தும் ஒக்டோபர் 03ஆம் திகதி மீளவும் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் பொருட்டு நேற்று முன்தினம் 29ஆம் திகதி, அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பாடசாலைகளுக்குச் சமூகமளித்திருந்தனர்.

கற்றல் நடவடிக்கைகளுக்காக ஜூலை 06ஆம் திகதி முதல் பாடசாலை திறக்கப்பட்டு மூன்று கட்டங்களாக கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.

இதற்கமைவாக ஜூலை 06 ஆம் திகதி தரம் 5 தரம் 11 மற்றும் தரம் 13 ஆகிய மாணவர்களுக்காக பாடசாலை திறக்கப்படும்.

ஜூலை மாதம் 20 ஆம் திகதி தரம் 10 மற்றும் தரம் 12 மாணவர்களுக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும்.

பின்னர் 3, 4, 6, 7, 8,மற்றும் 9ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலை ஜுலை மாதம் 27 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

இந்த நிலையிலேயே, தரம் 01 மற்றும் தரம் 02 மாணவர்களுக்காக ஓகஸ்ட் 03ஆம் திகதி பாடசாலை திறக்கப்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்