முகக் கவசம் அணியாத ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்

🕔 June 29, 2020

முகக்கவசம் பொது இடங்களில் அணியாத 1,214 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முகக் கவசம் அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலைவரப்படி (திங்கள் காலை 5.30 மணி) நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,037 ஆகும். இவர்களில் 1,661 பேர் குணமடைந்துள்ளனர்.

அந்த வகையில் 365 பேர் மட்டுமே தற்போது கொரோனா பாதிப்பின் பொருட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகளவில் 01 கோடியோ 86,690 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Comments