பெரிய நீலாவணையில் கரைவலைக்கு சிக்கிய ராட்சத சுறா; அரிய வகை மீன் என்பதால் கடலில் விடப்பட்டது

🕔 June 21, 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ்

பெரியநீலாவணை பகுதியில் கரைவலை மீன்பிடி வலைக்குள் 18 அடி நீளமுள்ள ராட்சத சுறா ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை சிக்கிக்கிறது.

மீனவர்கள் வழமை போன்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரத்தில் கரைவலையில் இந்த மீன் சிக்கியது.

இதனையடுத்து அயலில் நின்ற மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து மீனைக் கரைக்கு இழுத்தனர்.

எவ்வாறாயினும் மீனவர்களின் பெறுமாதியான வலைக்கு எந்தவிதப் பாதிப்புகளும் ஏற்படவில்லை.

புள்ளி சுறா இனத்தைச் சேர்ந்த இந்த மீன்  18 அடி நீளமாக காணப்பட்டதுடன்  சுமார் 2000 கிலோ நிறையுடையது எனவும் 30 லட்சம் ரூபா பெறுமதியுடையதாக இருக்கலாம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

பெரியநீலாவணை கரைவலை மீனவர்களின் வலையில் மிகவும் பெரிய ராட்சத மீன் சிக்கியது இதுவே முதல் தடவையாகும்.

இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் வேண்டு கோளுக்கு அமைய குறித்த ராட்சத சுறா, மீண்டும் பாரிய முயற்சிகளின் பின்னர் கடலுக்குள் விடப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்