கருணா அம்மானை கைது செய்ய வேண்டும்: சிங்கள சமூகத்துக்குள் வலுக்கிறது கோசம்

🕔 June 21, 2020

டையினர் 3000 பேரை கொலை செய்த கருணா அம்மானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சிங்கள ராவய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளளர் சந்திப்பில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மகல்கந்த சுதத்த தேரர் இந்த கேரிக்கையை முன்வைத்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் நாவிதன்வெளி பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில், தாம் ஒரே இரவில் 3000 படையினரை கொன்றதாக கூறியிருந்தார்.

அவரின் இந்த கருத்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலேயே, கருணாவை உடன் கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

இதேவேளை, மனித கொலையுடன் தொடர்புபட்ட சட்டத்தின் கீழ் கருணாவை கைது செய்ய முடியும் என்றும் இதற்கான நேரடியாக நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்த சுததிஸ்ஸ தேரர் வலியுறுத்தியுள்ளார்.

ஊடகசந்திப்பு ஒன்றின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“தான் செய்த குற்றத்தை அவரே ஒத்துக் கொண்டுள்ளார். சஹரானைப் போன்றே இவரும் மனிதப் படுகொலையைச் செய்துள்ளார்.

எனவே ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கையை துரிதமாக முன்னெடுக்க வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்