மருந்து கண்டுபிடிப்பதற்கு முன்னர், கொரோனா வைரஸ் தானாகவே அழிந்து விடும்: பேராசிரியர் கரோல் சிகோரா

🕔 May 19, 2020

ருந்து கண்டுபிடிக்கும் முன்பே, கொரோனா வைரஸ் தானாகவே அழிந்துவிடும் என்று உலக சுகாதார அமைப்பின் புற்றுநோயியல் துறை முன்னாள் விஞ்ஞானியும், கல்வியாளருமான பேராசிரியர் கரோல் சிகோரா தனது ‘ட்விட்டர்’ பதிவில் தெரிவித்துள்ளார்.

பொதுவாக நாம் கணிப்பதை விட நமக்கு அதிகமாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தான் கருதுவதாகவும், எனவே கொரோனா தொற்று பரவும் வேகத்தை கட்டுப்படுத்தினாலே நோய்க்கிருமி படிப்படியாக தானாகவே அழிந்துவிடும் என்றும் அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கரோல் சிகோராவின் இந்த ட்விட்டர் பதிவு வெளியானதை அடுத்து, அதுபற்றிய விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இதனையடுத்து கருத்து வெளியிட்டுள்ள அவர்; எதையுமே கணிக்க முடியாத தற்போதைய சூழ்நிலையில், இப்படி ஒரு சாத்தியம் உள்ளது என்ற வகையில் தனது சொந்த கருத்தை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நிச்சயமாக என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது என்றும், எனவே நோய்த்தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்