கொரோனா ‘மரணக் கணக்கு’: உலகளவில் 03 லட்சத்தை தாண்டியது

🕔 May 16, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 949 என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் மட்டும் 14 பேர் (இரவு 8.00 மணி வரை) கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயினும் பாதிக்கப்பட்டோரில் 520 பேர் பூரண குணமடைந்துள்ளனர் எனவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அந்த வகயைில் பாதிப்புக்குள்ளான 420 பேர் மட்டுமே தற்போது, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நோய்த் தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் 106 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் 46 லட்சத்து 41 ஆயிரத்து 975 பேர் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 03 லட்சத்து 08 ஆயிரத்து 853 பேர் மரணமடைந்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்