கூந்தலை இழந்த ஹிருணிகா: ‘அம்புட்டு’ அழகு

🕔 May 13, 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தனது தலைமுடியின் பெரும் பகுதியை, புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு – தலைமுடியை இழந்த பெண் நோயாளிகளுக்கு ‘விக்’ (பொய் முடி) செய்யும் திட்டத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இது குறித்து ஹிருணிகா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றினை இட்டுள்ளார். அதில்;

‘புற்றுநோய் என்பது நோயாளிக்கு மட்டுமன்றி அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் பயமுறுத்தும், கொடூரமான, துக்ககரமான அனுபவமாகும்.

அவர்களுடைய வலியை நாம் அகற்ற முடியாது, ஆனால் குறைந்தபட்சம் ஒரு கணம் அவர்களை மகிழ்விக்க முடியும்.

எனவே என் தலைமுடியை என்னை விடவும் தேவையள்ள ஒரு புற்று நோயாளிக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்து விட்டேன்.

பெண்களே, உங்கள் கூந்தலை வெட்டி வீசாமல், அவற்றினை தேவையானவர்களுக்கு நன்கொடையாக வழங்குமாறு அழக்கின்றேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

கூந்தல் இல்லாத ஹிருணிகா – ‘அம்புட்டு’ அழகு.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்