முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு 27ஆம் திகதி வரை விளக்க மறியல்

🕔 May 13, 2020

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலி்ல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை ராஜித சேனாரத்ன குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அவரை முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளை வேன் கடத்தல் தொடர்பான ஊடக சந்திப்பு வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டிருந்த பிணை ரத்துச் செய்யப்பட்டதை அடுத்து, அவரை நீதி மன்றில் ஆஜராக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

Comments