சீனாவின் வுஹானில் மீண்டும் கொரோனா; 01 கோடிக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ய திட்டம்

🕔 May 12, 2020

முதல் முதலாக கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதாக அறியப்படும் சீனாவின் வுஹான் நகரில் பல நாள்களுக்குப் பிறகு மீண்டும் 06 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த நகரில் உள்ள மொத்த மக்கள் தொகையான 01 கோடியே 10 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

இந்தத் தகவலை சீனாவின் அரசு ஊடகம் தெரிவிக்கிறது.

எனினும் இந்த யோசனை இன்னும் ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது.

ஏப்ரல் 3-ம் திகதி முதல் – அந்த நகரில் புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்படவே இல்லை. இந்நிலையில் 11 வார கால முடக்க நிலை ஏப்ரல் 08ம் திகதி தளர்த்தப்பட்டது.

கடந்த வார இறுதியில் 06 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மொத்த மக்களுக்கும் கொரோனா சோதனை செய்வது பற்றி திட்டமிடப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்