காத்தான்குடி தள வைத்தியசாலையில் கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வந்தோரில் 55 பேர் சொந்த இடம் திரும்பினர்

🕔 May 10, 2020

– பழுலுல்லாஹ் பர்ஹான் –

ட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி தள வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த 62 நோயாளிகளில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 55 பேர் உடல் நலம் முழுமையாக குணமடைந்த நிலையில் ராணுவத்தினரின் உதவியுடன் இரண்டு பஸ்கள் மூலம் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் நோய்க்கா சிகிச்சை பெற்று குணமடைந்த 55 பேரையும் வழியனுப்பி வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி தள வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இதன் போது காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், கொரோனா வைரஸினால் குணமடைந்தவர்களுக்கு பழங்கள், நீர் உள்ளிட்ட உணவு ஆகாரங்களையும் சிறுவர்களுக்கான அன்பளிப்பு பொருட்களையும் வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம். ஜாபிர் உள்ளிட்ட வைத்தியர்கள், ராணுவ உயரதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, தங்களை சிறந்த முறையில் பராமரித்து தங்களுக்கு சிறந்த முறையில் உணவுகளை வழங்கிய காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்தியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட சுகாதார துறையினருக்கும், ராணுவத்திற்கும், பொலிஸாருக்கும், காத்தான்குடி மக்களுக்கும் குணமடைந்து சென்றோர் நன்றி தெரிவித்தனர்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி மாவட்டங்களைச் சேர்ந்த பேருவளை, ஜாஎல, கொழும்பு பண்டார நாயக்கா மாவத்தை, காலி போன்ற பிரதேசங்களே இவ்வாறு குணமடைந்த நிலையில் சோந்த இடம் திரும்பினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்