தேர்தலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றில் மேலும் ஒரு மனு

🕔 May 6, 2020

பொதுத்தேர்தலை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஓர் அடிப்படை உரிமை மனு இன்று புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைக்கான நிலையம் – இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி, இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்த திகதி குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், நாடாளுமன்றத்தை கூட்டும் நாள், உரிய காலத்தை தாண்டி செல்வதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என மாற்றுக் கொள்கைக்கான நிலையம் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள், ஜனாதிபதி சார்பில் சட்ட மா அதிபர் ஆகியோர் மனுவில் – பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்