கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 50 வீதமானோருக்கு, நோய் அறிகுறிகள் தெரிவதில்லை: சுகாதார அமைச்சர்

🕔 May 5, 2020

மது நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 50 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தெரிவதில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

“எதிர்காலத்தில் ஊரடங்கு சட்டத்தினை தளர்த்தினாலும், அறிகுறிகள் தென்படாத நோயாளர்கள் உங்களோடு நடமாட வாய்ப்பு உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தொற்றில் அதிகரிப்பு ஏற்பட்டால், சமூகத்தில் உங்களுக்கும் தொற்று ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.

அதற்கு நாங்கள் எடுக்க வேண்டிய சிறந்த முறையானது, சுகாதார பிரிவு உங்களிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க எங்காவது ஓரிடத்தில் பிரவேசிக்கும் முன்னதாக கைகளைக் கழுவிச் செல்லுங்கள்” என சுகாதார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்