ஈஸ்டர் தின தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து, அவர்களின் சொந்தங்களுக்கு மன அமைதி வேண்டி ‘துஆ’ பிரார்த்தனை

🕔 April 21, 2020

– நூருள் ஹுதா உமர் –

ஸ்டர் தினத்தன்று கடந்த வருடம் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து, அவர்களின் சொந்தங்களுக்கு உள அமைதி கிடைப்பதற்காக வேண்டி இடம்பெற்ற துஆ பிரார்த்தனை நிகழ்வு சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் பிரதம இமாம் எம்.ஐ. ஆதாம்பாவா (ரஸாதி) பிரதம உரையையும், துஆ பிராத்தனையையும் நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் செயலாளர்,பொருளாளர், நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த வருடம் ஈஸ்டர் தினத்தன்று நாட்டிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் பயங்கரவாத குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி குண்டுத் தாக்குதல்களில் 39 வெளிநாட்டவர்கள் உட்பட 250 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இத்தாக்குதல் நடைபெற்று சில தினங்களின் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில்மறைந்திருந்த பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களைப் பற்றிய தகவல்களை, அப்பிரதேச மக்கள் – பாதுகாப்பு படைக்கு வழங்கி, நாட்டில் மற்றுமொரு பயங்கரவாதச் செயல் நடைபெறாமல் தடுத்திருந்தனர்.

அப்போது பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதக் கும்பலுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிலும், பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்ததிலும், அவர்கள் தரப்பில் 15 பேர் பலியாகினர்.

இதன்போது சாய்ந்தமருதை சேர்ந்த அப்பாவி இளம் பெண்ணொருவரும் துப்பாக்கிச் சூட்டின் இடையில் சிக்கிப் பலியாகியிருந்தமையும் குறிப்பிடதக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்