அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும், 05 ஆயிரம் ரூபா இடர்காலக் கொடுப்பனவு உள்ளது: மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்

🕔 April 18, 2020

பாறுக் ஷிஹான் –

கைமையை நிருபிக்கும் ஊடகவியலாளர்களுக்கு 5000 ரூபா இடர்காலக் கொடுப்பனவு நிபந்தனையுடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு  இடர்காலக் கொடுப்பனவு எவ்வாறு வழங்கப்படவுள்ளது என, இன்று சனிக்கிழமை நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பில் வினவிய போதே, அவர் இதனைக் கூறினார்.

“நிரந்திர சம்பளத்தை பெறாத பகுதி நேர ஊடகவியலாளர்கள், தமது நிலைமைய ஊடக நிறுவனத்தின் ஊடாக உறுதிப்படுத்த வேண்டும்.

அதேவேளை, எமக்கு ஊடக அமைச்சின் ஊடாக  பெயர் பட்டியல் தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெயர் இல்லாதவர்கள் கூட தத்தமது ஊடக தகைமையை  உறுதிப்படுத்தி  குறித்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போது இப்பெயர் பட்டியல் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஊடகவியலாளர் தகைமையை நிருபிக்கும் பட்சத்தில் 5000 ரூபா கொடுப்பனவு நிபந்தனையுடன்  வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்