புதிய திகதியை அறிவிக்காமல், நாடாளுமன்றத் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது: மஹிந்த ராஜபக்ஷ

🕔 April 18, 2020

நாடாளுமன்ற தேர்தலுக்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்காமல் தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சுட்டிக் காட்டியுள்ள அவர்; 1981 ஆம் ஆண்டின் இலக்கம் நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 24 (3) இனை மேற்கோள் காட்டியுள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் என்ன நிகழலாம் அல்லது நடக்காது என்ற ஊகத்தின் அடிப்படையில் இத்தகைய சட்டங்களை புறக்கணிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதன் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழு முதலில் பிரிவு 24 (3) இன் கீழ் தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அதன்பின்னர் நிலுவையில் உள்ள ஏதேனும் சிக்கல்கள் தொடர்பில் விவாதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்