கொரோனாவினால், 50 கோடி மக்கள் ஏழைகளாவர்: ஐ.நா. அறிக்கை

🕔 April 9, 2020

கொரோனா தொற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக உலகில் ஏழ்மை நிலை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சுமார் 50 கோடி மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை கூறுகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் உலகளவில் ஏழ்மை நிலை அதிகரிக்கப் போவது இதுவே முதல்முறை என அந்த அறிக்கை கூறுகிறது.

உலகிலுள்ள அபிவிருத்தியடைந்த மற்றும் வல்லரசு நாடுகளையே, கொரோனா அதிகமாகத் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகளவில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்