குறுஞ்செய்திகள் குறித்து அவதானம்: தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு எச்சரிக்கை

🕔 March 29, 2020

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பை பெறும் வகையில் முகமூடிகள் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது என்ற அறிவிப்புடன் உங்கள் கைத் தொலைபேசிகளுக்கு வரும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தற்போதைய அசாதாரண சூழ்நிலையைப் பயனப்டுத்தி பொதுமக்களுக்கு அவ்வாறான குறுஞ்செய்திகளை அனுப்புவோர் அதனுடன் ஓர் இணைய இணைப்பையும் (URL) சேர்த்து அனுப்புகின்றனர்.

அவ்வாறான இணைப்பை (URL) ‘கிளிக்’ செய்தால், தீங்கிழைக்கும் செயலிகள் மூலம் உங்கள் தனி நபர் தகவல்கள் திருடப்படும் என்று, தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, உங்கள் கைப்பேசிகளுக்கு வரும் இவ்வாறான குறுஞ்செய்திகள் குறித்து அவதானமாக இருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்