கொரோனாவினால் மரணித்தவரின் உடல் தகனம் செய்யப்பட்டது

🕔 March 29, 2020

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் உடல் ஞாயிற்றுக்கிழமை காலை தகனம் செய்யப்பட்டதாக ஊடகவியலாளர் தர்ஷன சஞ்ஜீவ, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தர்மசிறி ஜயானந்த எனும் 60 வயதுடைய நபர், நேற்றைய தினம் அங்கொட தொற்று நோயியல் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார்.

‘கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் சர்வதேச சுகாதார நியமங்களுக்கிணங்க, கொட்டிகாவத்த மயானத்தில் மேற்படி உடல் தகனம் செய்யப்பட்டது’ என்றும், ஊடகவியலாளர் தர்ஷன குறிப்பிட்டுள்ளார்.

புத்தளம் மாவட்டம் – மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த நபரே, கொரோனா தொற்றினால் நேற்று மரணமடைந்தார்.

தொடர்பான செய்தி: கொரனா நோயாளி, தொற்று நோயியல் வைத்தியசாலையில் மரணம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்