போதைப் பொருள் கொண்டுவந்த சாரதியின் கீழ்த்தரமான செயலுக்கு நான் பொறுப்பல்ல: லொறியின் உரிமையாளர் தெரிவிப்பு

🕔 March 28, 2020

– எம்.எஸ்.எம். நூர்தீன் –

த்தியவசியப் பொருட்களை கொழும்பிலிருந்து ஏற்றி வந்த தனது லொறியின் சாரதியும் உதவியாளர்களும், போதைப் பொருட்களை வைத்திருந்த கீழ்தரமான செயலுக்கும் தனக்கும் எந்த விதத் தொடர்பும் கிடையாது என்று, அந்த லொறியின் உரிமையாளரான காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் மக்பூல் ஹாஜியார் தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொழும்பிலிருந்து ஏற்றுக் கொண்டு வந்தபோது, காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் மக்பூல் ஹாஜியாரின் லொறியை செலுத்தி வந்த சாரதியும் அதில் வந்த இரண்டு கூலியாட்களும் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் கொண்டுவந்த ஹெரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பில் லொறியின் உரிமையாளரான வர்த்தகர் மக்பூல் ஹாஜியார் மேலும் தெரிவிக்கையில்;

“அல்லாஹ் மீது ஆணையாக எனக்கும் அந்த சமூக விரோதச் செயலுக்கும் சம்பந்தமே கிடையாது.

எனது லொறியின் டிரைவர் போதை வஸ்து கொண்டுவந்ததாக பல ஊடகங்களில் பகிரப்பட்டது, குறித்த ட்ரைவருக்கு ‘ட்ரிப்’ அடிப்படையில்தான் சம்பளம் வழங்கப்பட்டது.

லொறி கொழும்புக்குச் சென்றடைந்ததும் நாங்கள் கூறுகின்ற கடைகளுக்குச் சென்று பொருட்களை ஏற்றி வந்து தருவதே அவரது வேலை. ஊருக்கு வந்ததும் லொறியை கடையில் நிப்பாட்டி விட்டு ட்ரைவர் வீடு சென்றுவிடுவார். இதுதான் எல்லா தொழில் நிறுவனங்களிலும் நடக்கும் இயல்பான விடயம்.

எந்த முதலாலிகளும் லொறியில் அவர்களுடன் கொழும்புக்குச் சென்று, அவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்று கண்காணிப்பது கிடையாது.

எனவே நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என அல்லாஹ் மீது சத்தியமாக நான் கூறிக்கொள்கிறேன்.

குறித்த ட்ரைவர் ஏற்கனேவே இவ்வாறு செய்து வருகிறார் என்று தெரிந்திருந்தால், அந்த நிமிடமே நான் அவரை வேலையில் இருந்து விலக்கி இருப்பேன். அவர் இவ்வாறு நடந்துள்ளார் என்று இப்போதுதான் எங்களுக்கும் தெரியக் கிடைத்தது.

உலகம் பூராகவும் வைரஸ் பரவி வருகின்ற வேளையில், எமது நிறுவனமானது பொதுமக்களுக்காக வேண்டி அத்திய அவசிய உணவுப் பொருட்களை பெரும் சிரமத்திற்கு மத்தியில் கொண்டு வந்து அதை வியாபார நோக்கமில்லாமல் மக்களுக்காக சேவை நோக்கில் விநியோகிக்கின்றோம்” என்றார்.

தொடர்பான செய்தி: அத்தியவசியப் பொருட்களை காத்தான்குடிக்கு ஏற்றி வந்த லொறியில் போதைப் பொருள்: மூவர் கைது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்