முழு உடலையும் ஒரே நேரத்தில் கிருமி நீக்கம் செய்யும் தொழில் நுட்பம்: கடற்படையினர் அறிமுகம்

🕔 March 27, 2020

முழு உடலையும் ஒரே நேரத்தில் கிருமி நீக்கம் செய்யும் வகையிலான தொழில்நுட்பம் ஒன்றினை கடற்படையினர் அறிமுப்படுத்தியுள்ளனர்.

புகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் கூடிய, கிருமிநாசினி அறையாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை கடற்படை பொது இடங்களில் மற்றும் தனியார் நிறுவனங்களில் பல கிருமி நீக்கம் செய்யும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

கிழக்கு மற்றும் மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட பொறியாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்கள் பிரிவின் கடற்படையினரும் இணைந்து, இந்த கிருமி நீக்கம் செய்வதற்கான புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த முறைமையானது, முழு உடலையும் ஒரே நேரத்தில் கிருமி நீக்கம் செய்ய உதவுகிறது.

இந்த கண்டுபிடிப்பு தற்போது கடற்படை முகாம்களில் பலவற்றில் செயற்பாட்டுக்கு வந்துள்ளது. அவற்றில் ஒன்று கடற்படை தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலிலும் நிறுவப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, சிறப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக கடற்படை வீரர்கள் முகாம்களுக்கு வெளியேயும் தங்களுடைய கடமைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்