கொரோனா: புதிய நோயாளர்கள் இன்றும் அடையாளம் காணப்படவில்லை; நால்வர் சுகமடைந்து வீடு திரும்பினர்

🕔 March 26, 2020

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளர்கள் எவரும் இன்றைய தினமும் (வியாழக்கிழழை) நாட்டில் அடையாளம் காணப்படவில்லை என்று, சுகாதாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினமும் புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அங்கொடையிலுள்ள தொற்று நோயியல் வைத்தியசாலையிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளர்கள் முழுமையாகக் குணமடைந்த நிலையில், இன்று அங்கிருந்து விடுவிக்கப்பட்டுள்னர்.

அந்த வகையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆறுபேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும் உலகளவில் கொரோனா தாக்கம் காரணமாக 21,293 பேர் இன்றுவரை (பிற்பகல் 5.00 மணி வரை) மரணித்துள்ளனர்.

இன்று மட்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 48,460 பேர் உலக நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் 471,311 பேர் உலகளவில் இந்த நோயினால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

Comments