மீன்களுக்கு அதிக விலை; மாளிகைக்காடு துறையில் பாரிய சனத்திரள்

🕔 March 26, 2020

நூருல் ஹுதா உமர்

மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலைகள் இல்லாமையால், அம்பாறை மாவட்டத்தில் வியாபாரிகள் அதிகப்படியான விலைகளுக்கு மீன்களை விற்பனை செய்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.

இதேவேளை, நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் மீன்களை விநியோகிக்கும் மாளிகைக்காடு மீன்பிடித்துறையில், பாரிய வாகன நெரிசலும், சனத் திரளும் காணப்பட்டன.

இன்று வியாழக்கிழமை காலை ஆறு மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை மட்டும் ஊரடங்குச் சட்டம் தளத்தப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டமையை அடுத்து கல்முனை பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் வீதிக்கு வந்த மக்களை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில் பொதுமக்கள் அநாவசியமாக ஒன்று கூடுவதினை தவிர்க்கும் நோக்கோடு நாடெங்கும் ஊரடங்கு சட்டம் நடைமுறையிலிருப்பதினை அனைவரும் அறிவோம். அதனால் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதில் பாரிய நெருக்கடி நிலை இருந்து வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்