கொரோனாவினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் குணமானார்

🕔 March 23, 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி – முழுவதுமாக குணமடைந்து இன்று திங்கட்கிழமை காலை வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் வைத்தியசாலையில் தெரிவித்துள்ளது.

அவருக்கு பரிசோதனைகள் பல செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் முழுமையாக குணம் அடைந்துள்ளதாகவும் வைத்தியசாலையின் வைத்தியசாலைத் தரப்பு கூறுகிறது.

மேற்படி நபர் குணமடைந்த போதிலும், இரண்டு நாட்கள் மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலையில் தடுத்து அவர் வைக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னரே வைத்தியசாலையிலிருந்து அவர் வௌியேற அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மேலும் இரண்டு வார காலம் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்