கொரோனா தொற்று: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், இரண்டாவது நபர் அடையாளம் காணப்பட்டார்

🕔 March 21, 2020

– எம்.எஸ்.எம். நூர்தீன் –

ட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரனா தொற்றுக்குள்ளான இரண்டாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார் என, வைத்தியசாலை தரப்புகள் தெரிவிக்கின்றன.

இவர் மட்டக்களப்பு ரிதிதென்னையில் உள்ள கொரனா தனிப்படுத்தப்பட்டுள்ளவர் முகாமில் இருந்தவர்.

இத்தாலியில் இருந்து வந்த நிலையில், தனிப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 55வயதுடைய நபரே பாதிக்கப்பட்டுள்ளார். இவர் பாணந்துறையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர் நேற்று வெள்ளிக்கிழமை தனிப்படுத்தல் முகாமில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பரிசோதனைக்காக இவரின் இரத்தமாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் இன்று அவர் கொரோனா பாதிப்புக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்