பொதுத் தேர்தல்: நாடு முழுவதும் 7452 பேர் போட்டி; 304 அரசியல் கட்சிகளும், 313 சுயேட்சைக் குழுக்களும் களத்தில்

🕔 March 20, 2020

– மப்றூக் –

டைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமாக 7452 வேட்பாளர்கள் நாடு முழுவதும் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தகவலை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் அதிகமான வேட்பாளர்களும் (924), பொலநறுவை மாவட்டத்தில் மிகக்குறைவான (152) வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

நாடு முழுவதும் 339 அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்திருந்த போதும், அவற்றில் 35 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், 304 வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, 358 சுயேட்சைக் குழுக்கள் நாடு முழுவதும் வேட்பு மனுக்களைச் சமர்ப்பித்திருந்தன. அவற்றில் 45 நிராகரிக்கப்பட்டன. 313 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

நாடு முழுவதும் களமிறங்கியுள்ள 7452 வேட்பாளர்களில் 3652 பேர் அரசியல் கட்சி சார்ந்தவர்களாவர். 3800 பேர் சுயேட்சைக் குழு வேட்பாளர்களாவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்